» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு: சேலம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூடல்!

ஞாயிறு 12, ஜூலை 2020 10:26:58 AM (IST)

ஊழியர்களுக்கு கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சேலம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூடப்பட்டன. 

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பரிசோதனை செய்து கொள்ள ஆட்சியர் ராமன் உத்தரவிட்ட நிலையில் கடந்த 2 நாட்களில் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. இதனால் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நுழைவு வாயிலில் உள்ள மெயின் கதவு பூட்டப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.

ஆட்சியர் அலுவலகத்தில் 4 தளங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் சுகாதாரத்துறை மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் களப்பணியாளரான 32 வயதுடைய ஒருவருக்கும், அவரது மனைவியான மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 30 வயதுடைய சார்பதிவாளருக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் 2 பேருக்கும் நேற்று கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த களப்பணியாளர் பங்கேற்றுள்ளார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முதல் 3 நாட்களுக்கு அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதையும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory