» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது - அமைச்சர் பாண்டியராஜன்

சனி 11, ஜூலை 2020 5:37:19 PM (IST)

பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக் கூடியது, பல்வேறு கரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். 

சென்னையில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக விடியோ ஒன்றை வெளியிட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டுவதாக தெரிவித்தனர்.

மேலும், "தற்போது ஆங்கில மருந்துவம் செய்யும் பல ஆஸ்பத்திரிகளில், அலோபதி சிகிச்சை என்ற பெயரில் கபசுர குடிநீர் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. சித்த மருத்துவ சிகிச்சை தான் பல ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான சிறை கைதிகள் உள்பட 400 பேர் சித்த மருத்துவத்தினால் குணமடைந்துள்ளனர். ஒரு உயிர் பலி கூட ஏற்படவில்லை. சித்த மருத்துவம் குறித்து அரசிடம் இதுபோன்ற மனப்போக்கு இருந்தால், இந்த மருத்துவம் யாருக்கும் பயனின்றி போய் விடும். யாராவது கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என்று கூறினால், அதை அரசு கவனத்துடன் எடுத்து பரிசீலிக்க வேண்டும்” என்றும் நீதிபதி கூறினர்.

இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் இன்று சித்த மருத்துவ நிபுணர்களை சந்தித்து அவர்களிடம் கரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாள்ர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசு சித்த மருத்துவத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்தார். பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக் கூடியது என்றும் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது என்று அவர் கூறினார். மேலும் இதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes




Anbu Communications




Thoothukudi Business Directory