» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்

வியாழன் 9, ஜூலை 2020 5:29:26 PM (IST)

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்து வீடு திரும்பினார்.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் கோவை சிங்கா நல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம், எம்.எல்.ஏவின் மகள், மருமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் தற்போது கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அம்மன் அர்ஜூனனும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications








Thoothukudi Business Directory