» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் சந்தேகிப்பது ஏன்? உயர்நீதிமன்றம்

வியாழன் 9, ஜூலை 2020 4:35:48 PM (IST)

கரோனாவிற்கு சித்த மருத்துவர்கள்  மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? என மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதினறம் கேள்வி எழுப்பியுள்ளது.

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சென்னை உயர்நீதிமன்றம் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, நீதிபதிகள் மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதன்படி, "கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்? கரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்?

தமிழகத்தில் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவ வளர்ச்சிக்கு இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது? நாட்டில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனைகள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும், நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory