» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு

புதன் 8, ஜூலை 2020 6:23:55 PM (IST)

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று 1,261 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் 64 பேர் (அரசு மருத்துவமனை -46, தனியார் மருத்துவமனை -21) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 46,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory