» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் கரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது: 24 மணி நேரத்தில் 22 பேர் மரணம்

சனி 4, ஜூலை 2020 5:12:06 PM (IST)

சென்னையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் மரணம் அடைந்துள்ளது. 

சென்னையில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தினசரி 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. தினசரி 20க்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைகின்றனர். இந்நிலையில் சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தற்போது வரை சென்னையில் 64 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரத்து 111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 996 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு மண்டலங்களில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது பொதுமக்கள் இடையே நம்பிகை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 22 பேர் கரோனாவிற்கு மரணம் அடைந்துள்ளர். இதில் அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் 9 பேர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேர் உள்ளிட்ட 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory