» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜவுக்கு தான் லாபம்: நடிகர் எஸ்.வி. சேகர் அதிருப்தி

சனி 4, ஜூலை 2020 12:47:46 PM (IST)

என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜவுக்கு தான் லாபம்: இல்லையேல் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறித்து அக்கட்சியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி வருமாறு: 

கேள்வி: தமிழக பாஜகவில்  திமுகவில் இருந்து வந்த வி.பி.துரைசாமிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதே: பல்வேறு பிரிவுகளுக்கு தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதே ?

பதில்: இனிமேல் தான் பாஜக மிகப்பெரிய வளர்ச்சி பெறும், எழுச்சி பெறும் என்று கருதுகிறேன், 2021ஆம் ஆண்டில்  தனித்து நின்றே 100 இடங்களை பிடிக்கும் என்று நம்புகிறேன்,

கேள்வி: நடிகைகள் நமீதா, கெளதமி, மதுவந்தி, பாடகி காய்த்ரி ரகுராம் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதே?

பதில்: சரியான நேரத்தில முருகன் சரியான தலைவர்களை அடையாளம் காட்டியுள்ளார். பெண்களுக்கு 33 சதவீதம் அல்ல: அதற்கும் மேலாக பாஜக  பெண்களுக்கு இடமளித்து பெருமைப்படுத்தி இருக்கிறது, நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமல்ல: வீட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பாஜவை வாழ்த்துவார்கள்

கேள்வி: நடிகை குட்டி பத்மினிக்கு கூட பதவி வழங்கப்பட்டிருக்கிறது உங்களுக்கு வழங்கப்படவில்லையே

பதில்: திருவாளர் முருகனின் ஞாபக சக்தி எவ்வளவு என்று எனக்கு தெரியாதே.

கேள்வி: எதிர்காலத்தில் உங்களுக்கு பதவி வழங்கப்படும் என்று எதி்ர்ப்பார்க்கீறீர்களா?

நான் எந்த பதவியையும்  எதிர்பார்க்கவில்லை. பிரதமர் மோடியை நம்பி கட்சிக்கு வந்தவன் நான். பாஜக என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல: டில்லியில் இருந்து கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த கட்சி. என்னை பயன்படுத்தி கொண்டால் கட்சிக்கு தான் லாபம். அதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை" என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

MASSJul 4, 2020 - 02:53:55 PM | Posted IP 108.1*****

NANTRI

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory