» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனாவால் மதுராந்தகம் அரசு டாக்டர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!!

சனி 4, ஜூலை 2020 10:41:20 AM (IST)

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு தாலுகா மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் எஸ்.சுகுமாரன் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் எஸ்.சுகுமாரன் கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி, தனியார் மருத்துவமனையில் 20.6.2020 முதல் 30.6.2020 வரை சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு நோய் இருந்ததால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30.6.2020 அன்று சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். டாக்டர் சுகுமாரன் இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இந்த பேரிடர் நோய்த் தொற்று காலத்தில், கடமை தவறாமல் கண்ணியத்துடன் பணியாற்றிய டாக்டர் சுகுமாரன் குடும்பத்திற்கு அரசு அறிவித்தபடி நிவாரணம் வழங்கவும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory