» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

வெள்ளி 3, ஜூலை 2020 4:21:51 PM (IST)

தமிழகத்தில் ஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 3 மாதங்களாக அரிசி, பருப்பு, சர்க்கரை,கோதுமை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தறபோது ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அசிரி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3 மாதங்களில் வழகிய அசிரி அளவின்படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக்கடைகளில், விலையின்றி வழங்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகின்ற 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். பொருட்கள் வழங்கப்படும் நாள், மற்றும் நேரம் குறிப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலைக்கடைகளுக்கு 10.07.2020 முதல் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory