» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொன்மாணிக்கவேல் மருத்துவமனையில் அனுமதி

வெள்ளி 3, ஜூலை 2020 4:03:42 PM (IST)

தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் ஓய்வு பெற்ற காவல் தலைவர் ஏ.ஜி. பொன்மாணிக்கவேல்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல் துறைத் தலைவராக இருந்த பொன்மாணிக்கவேல் சில ஆண்டுகளாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றார். வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்ட ஏராளமான பழைமையான மிக விலை உயர்ந்த கோவில் சிலைகளைக் கண்டறிந்து மீட்டு வந்தார். 

இந்நிலையில், தஞ்சாவூருக்கு வந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி  சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதையடுத்து,  தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் நலமாக உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes





Anbu Communications



Thoothukudi Business Directory