» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி!!

திங்கள் 29, ஜூன் 2020 5:01:30 PM (IST)

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் அண்மை காலமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தேனி மாவட்ட ஆவின் தலைவரும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ. ராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications







Thoothukudi Business Directory