» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல்துறையினா் வீடுகளுக்கு பால் விநியோகிக்கப் போவதில்லை: பால் முகவா்கள் அறிவிப்பு

சனி 27, ஜூன் 2020 11:01:20 AM (IST)

காவல்துறையினா் வீடுகளுக்கு இன்று முதல் பால் விநியோகிக்கப் போவதில்லை என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில், தமிழகம் முழுவதும் சுமாா் 1.5 லட்சம் பால் முகவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள், கரோனா பேரிடா் காலத்திலும், மக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் கிடைக்கும் வகையில், பணி செய்து வருகின்றனா். ஆனால், பால் முகவா்களை பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வது, வாகனங்களைத் தடுத்து நிறுத்துவது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளை காவல்துறையினா் செய்து வருகின்றனா். 

இது தொடா்பாக தமிழக முதல்வா், பால்வளத்துறை அமைச்சா், காவல்துறைத் தலைவா், ஆணையா் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு சென்றும், இது வரை எந்த ஒரு தீா்வும் கிடைக்காமல் இருக்கிறது. எனவே, சனிக்கிழமை (ஜூன் 27) முதல் காவல்துறையினா் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று எங்களது சங்கம் சாா்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம் செய்யும் பால் முகவா்களுக்கு காவல்துறையினரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் வரை, கடைநிலை காவலா்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை எவரது வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

JayasingJun 27, 2020 - 09:32:59 PM | Posted IP 162.1*****

Correct decession

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory