» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சினிமா பாணியில் வங்கி பெண் அதிகாரியிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்: தொழிலதிபர் கைது

வெள்ளி 5, ஜூன் 2020 12:38:37 PM (IST)

சினிமா பட பாணியில் வங்கி பெண் அதிகாரியை மிரட்டி ரூ. 25 லட்சம் பணம் பறித்த தோல் தொழிற்சாலை அதிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலை பகுதியை சேர்ந்தவர் சக்தி (36). அண்ணா சாலையில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2008ம் ஆண்டு சிவகுருநாதன் என்பவருடன் திருமணமானது. 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் கடந்த 2017ம் ஆண்டு முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றார்.  கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை கெல்லிஸ் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்த போது அந்த வங்கிக்கு வாடிக்கையாளராக வந்த பெரியமேடு தொப்பை பிள்ளைத் தெருவைச் சேர்ந்த ரபியா பஸ்ரின் (38) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 

அவரது கணவர் நாகூர் மீரானும் குடும்ப நண்பர் போல சக்தியுடன் பழகினார். சக்தி குழந்தையில்லாமல் தவித்து வருவதை நாகூர் மீரானிடம் சொல்லி சக்தி வருத்தப்பட்டுள்ளார். இதனால் நாகூர் மீரான் மற்றும் ரபியா பஸ்ரின் ஆகியோருக்கு நன்கு தெரிந்த டாக்டரான உமாராணி என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார். அவர்களை நம்பிய சக்தி டாக்டர் உமாராணியிடம் சிகிச்சை பெற்று டெஸ்ட் டியூப் மூலம் இரட்டைப் பெண் குழந்தையை பெற்றுள்ளார். இதன் மூலம் சக்தி நாகூர் மீரான் குடும்பத்திற்கு 13லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நாகூர்மீரான் குழந்தை பிறந்ததற்கு காரணம் தனது உயிர் அணுக்கள் எனவும் இதனால் ரூ. 25 லட்சம் தர வேண்டும் என சக்தியிடம் அடிக்கடி கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதே போல சம்பவம் குற்றம் 23 என்ற சினிமா படத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் வில்லன் இதே போல தனது விந்துவை டெஸ்ட் டியூப் பேபிக்கு தானம் செய்து விட்டு குழந்தை பிறந்த பின்னர் அந்தப்பெண்ணை மிரட்டி பணம் பறிப்பான். அதே போல இந்த சம்பவம் நடந்துள்ளது.  இந்நிலையில் நேற்று முன்தினம் எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள சக்தியின் வீட்டிற்கு வந்த நாகூர் மீரான் அவரை தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

25 லட்ச ரூபாய் பணம் கொடுக்கவில்லையென்றால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக சக்தி எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எழும்பூர் போலீசார் நாகூர் மீரானை கைது செய்தனர். அவர் மீது 294(பி) (தரக்குறைவாக திட்டுதல்), 354 (மானபங்கப்படுத்துதல்), 448 (அத்து மீறி உள்ளே நுழைதல்), 506(2l) கொலை மிரட்டல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைத்தடுப்புச் சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்குப்பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory