» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக எம்எல்ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றமில்லை : மருத்துவமனை நிர்வாகம்

வியாழன் 4, ஜூன் 2020 7:05:57 PM (IST)

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,61 வயதான அன்பழகன் ஏற்கனவே கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 80% ஆக்சிஜன் வெண்டிலேட்டர் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory