» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன் 3, ஜூன் 2020 4:14:25 PM (IST)

தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வில் பொதுச்செயலாளராக இருந்தவர் க.அன்பழன். அவர் மார்ச் மாதம் சென்னையில் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியானது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி என்பது மிகமுக்கியமான பதவியாகும். திமுகவில் அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழகன் ஆகியோர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவி வகித்துள்ள நிலையில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 29ம் தேதி திமுகவின் பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திமுகவின் பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பொதுக்குழு கூடும் வரை திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரோனா சூழலில் பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகனின் கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes

Thoothukudi Business Directory