» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

செவ்வாய் 2, ஜூன் 2020 4:43:00 PM (IST)

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து  வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் பக்தவச்சலம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் பொதுத்தேர்வை அரசு அறிவித்துவிட்டது. கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் எத்தனை சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என கூறவில்லை. தற்போதைய நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால், 15 நாட்கள் பயிற்சி வகுப்பு  நடத்த உத்தரவிட வேண்டும். தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி உத்தரவிடவேண்டும்’ என மனுதாரர் கூறியிருந்தார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory