» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள் : நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வைகோ வலியுறுத்தல்

செவ்வாய் 2, ஜூன் 2020 12:06:39 PM (IST)

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதாகவும் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் மதிமுக பொது செயலாளர் வைகோ  வலியுறுத்தியுள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், கலிங்கப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படை, பருத்திச் செடிகளின் மேல் படர்ந்துள்ளன.இதுகுறித்து, விவசாயிகள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். வேளாண்துறை அதிகாரிகள் நேற்று வருகை தந்து ஆய்வு செய்தனர். இவை, பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல; அச்சப்படத் தேவை இல்லை என்று கூறி உள்ளனர்.

இது தொடர்பாக, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனுடன் பேசினார். ஆட்சியர் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு,  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், தமிழக அரசின் விவசாயத்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.பிடிபட்ட வெட்டுக்கிளிகளை எடுத்துக்கொண்டு விவசாயிகள், இன்று மாலை தென்காசி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory