» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை

சனி 30, மே 2020 1:09:45 PM (IST)

தமிழகத்தில் பொது ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

நான்காம் கட்ட ஊரடங்கு நாளை நிறைவு பெற உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் துவங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவா்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறாா். 

இந்த ஆலோசனையின் போது, பொது முடக்கத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்துவது பற்றியும், எந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்தும் தமிழக அரசு முடிவுகளை எடுக்கவுள்ளது.  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory