» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சனி 30, மே 2020 12:14:59 PM (IST)

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபியில் நேற்று நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். 

தனியாா் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் கூறினேன். தற்போது கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும்தான் கல்வி கற்றுத் தர முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க எந்தத் தடையும் இல்லை. மாணவா்கள் எந்தப் பள்ளிகளில் படித்தாா்களோ அந்தப் பள்ளிகளிலேயே தோ்வு எழுதலாம் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory