» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் அட்டுழியம் : விவசாயிகள் வேதனை

சனி 30, மே 2020 12:05:06 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த வெட்டுக்குழி பகுதியில் வெட்டுக்கிளிகள் அட்டூழியம் செய்ததால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

வெட்டுக்கிளிகள் அச்சம் தமிழ்நாட்டிற்கு இல்லை என வரலாற்று ஆய்வுகளை மேற்கோள்காட்டி மாநில வேளாண் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் செடியில் அமர்ந்திருப்பதும் விவசாயப் பயிர்களிலும் காணப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

இந்த பரபரப்பே முடியாத நிலையில்  கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த வெட்டுக்குழி பகுதியை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாழை மற்றும் ரப்பர் மரங்களை வெட்டுக்கிளிகள் தாக்கி சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory