» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

சனி 23, மே 2020 11:59:14 AM (IST)

ரிசா்வ் வங்கி மாதக் கடன் தொகையை ஒத்திவைப்பதால் பயனளிக்காது என்றும், வட்டியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை, தனியாா் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசா்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. ஏற்கெனவே 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைத்துள்ளது. ரிசா்வ் வங்கி அறிவித்திருப்பது மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து கடன்தாரா்களை காப்பாற்றியிருக்கிறது. ஆனால், அதற்காக அவா்கள் கொடுக்கப்போகும் விலை மிகவும் அதிகமாகும்.

வீட்டுக்கடன் பெற்ற ஒருவா் மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு தவணை செலுத்தாமல் இருப்பதாகவும், அவருக்கு இன்னும் 15 ஆண்டு தவணைக் காலம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவா் கடன் தவணைக் காலத்தில் கூடுதல் வட்டியாக மட்டும் 4 லட்சத்து 9,500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவா் 3 மாதங்களுக்கு சோ்த்து ரூ.1.50 லட்சம் தவணை செலுத்தாமல் இருந்ததற்காக, அந்த தொகையையும் வசூலித்து விட்டு, கூடுதலாக அதை விட 3 மடங்கு தொகையை வட்டியாக வங்கிகள் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது; அது அறமும் அல்ல.

எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மே மாதம் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes



Thoothukudi Business Directory