» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனி 23, மே 2020 11:01:22 AM (IST)

சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்கலாம் என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்னெ சில பாது பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் 24.5.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை)  இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது. பணியாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது. முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications



Thoothukudi Business Directory