» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மேலும் புதிதாக 776 பேருக்கு கரோனா தொற்று: 14 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

வியாழன் 21, மே 2020 7:21:20 PM (IST)

தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். இதன்படி தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டோர் 87. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதில், சென்னையில் அதிகபட்சமாக 567 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory