» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி: நாளை முதல் பணிகள் தொடங்கலாம்!!

வியாழன் 21, மே 2020 11:36:10 AM (IST)

சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 4- ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சினிமா சார்ந்த பணிகளும் நிறுத்து வைக்கப்பட்டது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை போன்ற சினிமாவை சார்ந்து இருக்கும் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. 

இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது. உள்ளரங்க படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளைத் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையர், மாவட்டங்களில்  ஆட்சியர் அனுமதியை பெற வேண்டும். படப்பிடிப்பில் அதிகபட்சம் 20 பேர் பங்கற்கலாம்.  போன்ற நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory