» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அநாவசியமாக நடமாடுபவர்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு : கன்னியாகுமரி எஸ்பி நடவடிக்கை

வியாழன் 26, மார்ச் 2020 4:07:58 PM (IST)

குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது சாலைகளில் தேவையின்றி நடமாடுபவர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாகர்கோவிலில் சாலைகளில் அனாவசியமாக வருபவர்களை முதல் முறையாக  ட்ரோன் கேமிரா முறை முதல் அமல்படுத்தப்பட்டது. இதனை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி., ஸ்ரீ நாத் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ட்ரோன் கேமிரா முறையை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டம் வந்த 3600 பேர் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியே நடமாடினால் நிரந்தரமாக சிறைத்தண்டனை வழங்கப்படும். 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறி சாலைகளில் அனாவசியமாக நடமாடிய 11பேர் மீது புதன்கிழமை ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory