» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு : கன்னியாகுமரியில் பரபரப்பு

வியாழன் 26, மார்ச் 2020 11:15:32 AM (IST)

கன்னியாகுமரியில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவர் மார்ச் 3 ஆம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார், அவர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் புதன்கிழமை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியாதாவது: உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே கல்லீரல் மற்றும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory