» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் அறிவித்துள்ள 21 நாட்கள் தடை உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன் : ஸ்டாலின்

புதன் 25, மார்ச் 2020 11:28:25 AM (IST)

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக பிரதமர் அறிவித்தள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

நாடெங்கும் கடுமையான ஒரு சூழலில் உள்ள நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அரசு எந்திரம் முழுமையாக முடுக்கி விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பைத் தடுக்க 144 தடை உத்தரவை இன்று மாலை முதல் தமிழக அரசு அமல்படுத்தியது. 

பின்னர் இரவு 8 மணிக்கு பேசிய பிரதமர் மிக உருக்கமாக ஆணித்தரமாக பல கோரிக்கைகளை பொதுமக்களுக்கு வைத்தார். தயவுசெய்து 21 நாட்கள் ஊரடங்கை நாமெல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா வைரஸை ஒன்றுபட்டு முறியடிப்போம் என்று தெரிவித்தார். பிரதமரின் கருத்தை ப.சிதம்பரம், ஸ்டாலின், உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். 

பிரதமரின் அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்று முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது முகநூல் பதிவு: "கரோனா வைரஸின் கொடூரம் தடுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் கடைப்பிடிக்கச் சொன்ன ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நமக்கு நாமே இதனைச் சட்டமாக்கிக் கொள்வோம். நோய் பரவாமல் தடுக்க இதைத் தவிர மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்”. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory