» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : புழல் சிறைக் கைதிகள் 156 பேர் ஜாமீனில் விடுதலை!!

புதன் 25, மார்ச் 2020 11:10:55 AM (IST)

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 156 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள புழல் சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதியாக சிறையில் 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மகளிர் சிறையில் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு எதிரொலியாக சிறையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், கைதிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்பொருட்டு, சிறுசிறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. 

இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் மூலம் ஜாமீன் வழங்கி நேற்று விசாரணை கைதிகளில் ஆண்கள் 226 பேரையும், பெண் கைதிகள் 36 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய நீதிமன்றங்களில் சிறப்பு ஜாமீன் வழங்கப்பட்டு நேற்று பகல் முதல் இரவு 8 மணி வரை 150 ஆண் கைதிகளும், 6 பெண் கைதிகளும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, சிறையில் இருந்து வெளியில் வந்த கைதிகளை அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஜெயில் வாசலில் கூடியிருந்தனர். 

இதைத்தொடர்ந்து, 2 பேர் முதல் 5 பேர் வரை படிப்படியாக விடுவிக்கப்பட்டு வெளியில் வந்த கைதிகளை அவரது உறவினர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக கைதிகளை தமிழக அரசு விடுதலையை மேற்கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து மீதமுள்ள கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu CommunicationsThoothukudi Business Directory