» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு ; மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கும்

செவ்வாய் 24, மார்ச் 2020 6:45:43 PM (IST)

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மார்ச் 31ம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், மார்ச் 31ம் தேதி வரை பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட போக்குவரத்துகள் இயக்கப்படாது.பொதுமக்கள் 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. தேநீர் கடைகள் திறந்திருக்கும். ஆனால், 5 பேருக்கு மேல் கூட்டமாக நின்று தேநீர் அருந்தக் கூடாது. 

அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.மேலும், மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், அத்தியாவசியப் போக்குவரத்து வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் முதல்வா் கூறினாா்.இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory