» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதன் 19, பிப்ரவரி 2020 3:58:28 PM (IST)

சிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தொண்டு என்று சொல்லுக்கு அடையாளமாகவும், அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தும் கொண்ட சிவானந்தா குருகுலத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாராமின் இறப்பு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் - முதியோர் எனப் பலருக்கும் ஆதரவுக் கரமாக இருந்து மறுவாழ்வு அளித்தவர். 

என்னுடைய பிறந்தநாளில் அவரது குருகுலத்திற்குச் சென்று அங்கு தங்கியிருப்போருடன் அளவளாவி, நிதியுதவி வழங்கியிருக்கிறேன். அப்போது ராஜாராமின் தூய தொண்டுள்ளத்தையும் சலிப்பில்லாத அர்ப்பணிப்பையும் கவனித்துள்ளேன். அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆற்றிய தொண்டும் அவர் உருவாக்கிய சேவை அமைப்புகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். அதில் ராஜாராம் வாழ்ந்து கொண்டிருப்பார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

சென்னை - தாம்பரம் அடுத்து இருக்கும் காட்டாங்குளத்தூரில் சிவானந்தா குருகுலம் செயல்பட்டு வருகிறது. இதன் பொதுச்செயலாளராக 1967ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ராஜாராம் (67) பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1945 ஆண்டு தொடங்கப்பட்ட  சிவானந்தா குருகுலத்தில் பெற்றோர் இல்லாத பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக ராஜாராம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உடல் காட்டாங்குளத்தூரில் இருக்கும் சிவானந்தா குருகுலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications


Thoothukudi Business Directory