» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்து முன் சீட்டில் அமரும் பெண்களிடம் பேசக் கூடாது: ஓட்டுநர்களுக்கு புதிய தடை

புதன் 19, பிப்ரவரி 2020 3:50:57 PM (IST)

கோவையில், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் ஓட்டுநர்கள், பேருந்தை இயக்கும் போது முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக் கூடாது என்று புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் ஓட்டுநர்கள் பேசிக் கொண்டே ஓட்டும் போது ஏற்படும் சில பிரச்னைகள் குறித்து பயணிகள் தொடர்ச்சியாக அளித்த புகார்கள் மீது கோவை அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 19ம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பேருந்தின் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம், பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் பேசக் கூடாது, அவ்வாறு விதியை மீறி நடந்தால், அவர்கள் மீது நடவடிக்கைப் பாயும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு விபத்து என்பது கண் இமைக்கும் நொடிக்குள் நிகழ்ந்துவிடும். எனவே, ஓட்டுநர்கள் கவனத்தை திசை திருப்பும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கிவிடுவது நல்லது என்று அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஓட்டுநர்கள், முன் இருக்கையில் அமரும் பெண்களுடன் பேசிக் கொண்டே, முக்கிய நிறுத்தங்களில் கூட நிற்காமல் போவதும், பயணிகள் ஏறிவிட்டார்களா என்று பார்க்காமல், பேருந்தை இயக்குவதும் தொடர்கதையாகி வந்ததால்தான் இது குறித்து புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory