» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முரசொலி நிலம் தொடர்பான வழக்கு: தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவர் பதில் அளிக்க உத்தரவு

புதன் 19, பிப்ரவரி 2020 11:48:46 AM (IST)

முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘முரசொலி அறக்கட்டளை’ இயங்கி வரும் இடம் ‘பஞ்சமி நிலம்’ என்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சம்மன் பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், முரசொலி நிலம் தொடர்பான புகாரை ஆணையத்தின் துணைத்தலைவரான முருகன் விசாரிக்கக்கூடாது என உத்தரவிட்டார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணைய துணைத்தலைவர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இது பஞ்சமி நிலம் அல்ல என்பதை முரசொலி அறக்கட்டளை முதலில் நிரூபிக்கட்டும். இந்த நிலம் தொடர்பான புகாரை விசாரிக்க எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்துக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. எனவே, விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டு’ என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிட்டார். அவர், ‘எஸ்.சி., எஸ்.டி., ஆணையத் துணைத்தலைவரான முருகன், பா.ஜனதாவின் தேசிய செயலாளராக பதவி வகித்தவர். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முரசொலி நிலம் குறித்து விசாரணை மேற்கொண்டார்’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி சி.வி. கார்த்திக்கேயன், இந்த வழக்குக்கு தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற மார்ச் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory