» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்: பூமி பூஜையுடன் ஆளுநர் தொடங்கி வைத்தார்

சனி 15, பிப்ரவரி 2020 3:54:25 PM (IST)



சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ்  சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வரும் அக்‍ஷய பாத்ர அறக்கட்டளையின் சார்பில், சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கிடும் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சென்னையில் இன்று சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12,000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்‍ஷய பாத்ர அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த மனித நேயப் பணியை செயல்படுத்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது விருப்ப நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications




Thoothukudi Business Directory