» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு: அரசு அலுவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சனி 15, பிப்ரவரி 2020 3:47:24 PM (IST)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் அரசு அலுவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு பின்புலமாக இருந்த இடைத் தரகர் ஜெயக்குமார், போலீஸ்காரர் சித்தாண்டி, டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

குரூப்-2ஏ தேர்வில் ரூ.9 லட்சம் கொடுத்து வெற்றி பெற்றதாக கைது செய்யப்பட்ட வேலூர் மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய திருவண்ணாமலையைச் சேர்ந்த வினோத்குமார், குரூப்-4 தேர்வில் தலா ரூ.7 லட்சம் கொடுத்து வெற்றி பெற்றதாக கைதான கடலூரைச் சேர்ந்த சீனிவாசன், அவரது உறவினர் ராஜசேகர் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வினோத்குமார் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory