» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி விவகாரம்: முதல்வருடன் காவல் ஆணையர் திடீர் சந்திப்பு

சனி 15, பிப்ரவரி 2020 11:37:13 AM (IST)

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து பேசினார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது தடியடி நடத்திய போலீசாரைக் கண்டித்தும், இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

சென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து பேசினார். சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக முதல்வரை சந்தித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes



Thoothukudi Business Directory