» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இரு நிலைகளாக மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு

சனி 15, பிப்ரவரி 2020 11:25:28 AM (IST)

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் முதல் நிலை, முதன்மை நிலை என இரு தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தப்பட்ட குரூப் -4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். 

தொடர் விசாரணையில், குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலமானது.  டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இடைத்தரகர் ஜெயக்குமார் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். முறைகேடு புகார்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில்,  இனி வரும் காலங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில்,  பல்வேறு சீர்திருத்தங்களை  டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. 

இதன்படி,  

*குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் பொது அறிவு தாள் இரண்டாக நடத்தப்படும்.

* குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் முதல் நிலை, முதன்மை நிலை என இரு தேர்வுகளாக மாற்றம்.

*தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடக்கும். தேர்வர்கள் 9 மணிக்கே தேர்வறைக்கு வர வேண்டும். 

* கொள்குறிவகைத் தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் பதிலளிக்க வேண்டும். விடை தெரியவில்லையெனில் கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும். 

* தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையொப்பத்திற்கு பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும். 

*தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்து வர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு அதி நவீன தொழில்நுட்ப ஜி.பி.எஸ் மற்றும் கண்காணிப்புக்   கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.  இந்த நடவடிக்கை முழுவதும் நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory