» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்

சனி 15, பிப்ரவரி 2020 10:34:40 AM (IST)

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது தடியடி நடத்திய போலீசாரைக் கண்டித்தும், இந்தப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய விடிய சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன செய்தியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிடுப்பதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory