» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப்-4 தேர்வு முறைகேடு : பணம் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது

வெள்ளி 14, பிப்ரவரி 2020 11:12:36 AM (IST)

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பி.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2 ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது. தேர்வில் வெற்றி பெற பலர் பணம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை மாநகர போலீசில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. நாராயணன் உள்பட 412 பேரை கைது செய்தனர். இந்த முறைகேடுக்கு மூளையாக இருந்த ஜெயக்குமார் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் போலீஸ் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்து உள்ளார். அதன்விளைவாக இந்த முறைகேட்டில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு வி.ஏ. ஓ. கைதாகி உள்ளார். 

அவரது பெயர் அமல்ராஜ் (29). செஞ்சி அருகே உள்ள அணிலாடி கிராமத்தை சேர்ந்த இவர் அனந்தபுரம் பகுதியை அடுத்து உள்ள அத்தியூர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பணம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிவந்து உள்ளது. சென்னையில் இருந்து வந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் அமல்ராஜை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக சென்னைக்கு போலீசார் அழைத்து சென்று உள்ளனர். விசாரணைக்கு பின்னர் தான் மோசடி குறித்த முழு விவரம் தெரியவரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Anbu Communications
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory