» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தர்பார் படச் சர்ச்சை: வத்தலகுண்டில் டி.டி.வி ஆதரவாளர்கள் சுவரொட்டியால் பரபரப்பு

சனி 11, ஜனவரி 2020 11:40:26 AM (IST)

தர்பார் படச் சர்ச்சையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நடிகர் ரஜினிகாந்த்தைக் கண்டித்து டி.டி.வி ஆதரவாளர்கள் ஒட்டிய கண்டன போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சமீபத்தில் வெளியான தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் ஒரு வசனத்தில் சிறைக்கைதிகள் ஷாப்பிங் போவது சகஜம் என்பதைப் போல் காட்சி வெளியானது.இந்நிலையில் வத்தலக்குண்டில் மக்கள் செல்வன் டி.டி.வி போர் படை என டி.டி.வி ஆதரவாளர் மணிகண்டன் என்பவர் நகர்ப்பகுதி முழுவதும் கண்டன போஸ்டர் ஒன்றினை ஒட்டி உள்ளார். 

அதில் பிழைக்க வந்த நீ பிழைத்துக்கொள், வணிகத்தில் அரசியலை வைக்காதே, மதுரை விமான நிலையத்தைச் சம்பவத்தை மறந்துவிடாதே  திருத்திக்கொள் என்பது போன்ற வாசகங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

உண்மைJan 13, 2020 - 05:52:01 PM | Posted IP 162.1*****

மன்னார்குடி மாபியா அரசியல்வாதிகள் சில பேர் திருடர்கள் உண்மைதானே

அருண்Jan 13, 2020 - 12:48:31 AM | Posted IP 108.1*****

அப்போ அரசியல்-னா திருடுறதா உங்க ஊர்ல

அருண்Jan 12, 2020 - 02:26:23 PM | Posted IP 106.2*****

தட் கொண்டைய மறைக்க மறந்த moment

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory