» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் வடமாநில முதியவர் கைது

சனி 14, டிசம்பர் 2019 10:26:18 AM (IST)

கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத்தை சோ்ந்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

கோவையை சேர்ந்த 13 வயது மாணவி மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி செல்லும்போது மர்ம நபர் ஒருவர் தன்னை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினார். உடனே அந்த ஆசிரியை மாணவியின் பெற்றோருக்கு தகவல் தொிவித்தார். இதையடுத்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது மாறுவேடத்தில் பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது மாணவியை, அந்த மர்ம நபர் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே பெண் போலீசார் அந்த மர்ம நபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜு (வயது 60) என்பதும், இவர் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்ததும், குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு திரும்பி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜு வை, கைதுசெய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory