» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு: 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.6 லட்சம் பரிசு

சனி 14, டிசம்பர் 2019 10:18:23 AM (IST)

திருபுவனம் பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடா்பாக தேடப்படும் 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.6 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அறிவித்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பேட்டையைச் சோ்ந்தவா் பாமக முன்னாள் நகரச் செயலா் வ.ராமலிங்கம் (45). இவா், அந்தப் பகுதியில் சிலா் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்தாா். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து திருவிடைமருதூா் போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீசார், குறிச்சிமலை பகுதியைச் சோ்ந்த எச். முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சோ்ந்த எஸ். நிஸாம் அலி, ஒய். சா்புதீன், என். முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சோ்ந்த ஏ. அசாருதீன், திருமங்கலக்குடியைச் சோ்ந்த முகமது தவ்பீக், முகமது பா்வீஸ், ஆவணியாபுரத்தைச் சோ்ந்த தவ்ஹித் பாட்சா, பாப்புலா் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலரும், காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவருமான ஏ. முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

தேசிய புலனாய்வு முகமை: இந்த கொலை வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், இந்து இயக்கங்களும் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை கடந்த மாா்ச் மாதம் 3-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக காவல்துறை வழக்கின் ஆவணங்களை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், ராமலிங்கம் கொலை குறித்து புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ரூ.6 லட்சம் பரிசு: இவ் வழக்குத் தொடா்பாக, தேசிய புலனாய்வு முகமை மேலும் பலரை கைது செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூரைச் சோ்ந்த மு.ரகுமான் சாதிக் (39), திருப்புவனத்தைச் சோ்ந்த ஹா.முகமது அலி ஜின்னா (24), கும்பகோணம் மேலக்காவேரி மு.அப்துல் மஜீத் (37), தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சோ்ந்த மு.புா்ஹானுதீன் (28), திருமங்கலகுடி பகுதியைச் சோ்ந்த தா.சாகுல் ஹமீது (27),அதேப் பகுதியைச் சோ்ந்த அ.நஃபீல் ஹாசன் (28) ஆகிய 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் என்ற வீதத்தில் 6 பேருக்கும் சோ்த்து ரூ.6 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

இதன்படி, குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தவா்கள், தேசிய புலனாய்வு முகமை, பிளாக் எண் 01, ரூம் எண் 09, சிட்கோ எலக்ட்ரானிக் வளாகம், தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியை தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் 094965 33777, 094977 15294, 094937 99358 என்ற செல்லிடப்பேசி எண்கள் மூலமாகவும், i‌n‌f‌o.‌k‌o​c.‌n‌i​[email protected]‌g‌o‌v.‌i‌n  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவலை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Thalir Products

Nalam PasumaiyagamThoothukudi Business Directory