» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் : சுவரின் உரிமையாளர் கைது

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:11:48 PM (IST)மேட்டுப்பாளையத்தில் நேற்று காலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது, இதில் 17 பேர் பலியான சம்பவத்தில், தலைமறைவாக இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்திலுள்ள ஏடி காலணியில் சக்கரவர்த்தி துகில் மாளிகை என்ற துணி கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் வீடு உள்ளது. இந்த வீட்டின் சுற்றுச்சுவர் 15 அடி  உயரம் உள்ளது. சிவசுப்பிரமணியம் வீட்டின் பின்புறம் தலித்களின் வீடுகள் உள்ளன. அவர்கள் சுப்பிரமணியம் வீட்டின் முன்புறம் வழியாக போகவும் வரவும் நடைபாதையாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தனது வீட்டுக்கு 15 அடி உயர் சுற்றுச்சுவர்  அமைத்துள்ளார் சிவசுப்பிரமணியம்.

 சுற்றுச் சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுவரை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருந்த இருந்த 4 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. அதன் உள்ளே உறங்கி கொண்டிருந்த 17 பேர் பலியாகினர். தரமின்றி அவசரகதியில் சுவரை கட்டி 17 பேர் மரணத்திற்கு காரணமான சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அலட்சியமாக விபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசுப்பிரமணியம் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை, 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமுகை அருகே சிவசுப்பிரமணியம் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory