» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் ரஜினிகாந்த்துடன் கேரள மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ் சந்திப்பு
திங்கள் 2, டிசம்பர் 2019 8:21:51 PM (IST)

கேரள முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
கேரளா மாநிலம் ஆலத்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியரான பிரணவ், மகா புயலால் கேரளா பாதிக்கப்பட்ட போது, தன்னால் இயன்ற நிவாரண நிதியை அளிப்பதற்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.பிரணவிடம் நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பினராயி விஜயன், தனது கைகளால் அவரது கால்களை குலுக்கி பாராட்டினார். தொடர்ந்து பிரணவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பினராயி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பிரணவ் உடனான சந்திப்பு நெகிழ்சியாக இருந்தது என பதிவிட்டிருந்தார்.
கைகள் இல்லாமல் கால்களை மட்டுமே பயன்படுத்தும் பிரணவ், கால்கள் மூலம் படங்கள் வரைவது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கேரள முதல்வருடனான சந்திப்பு பற்றி பேசியிருந்த பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பது குறித்த தனது ஆசையையும் வெளிப்படுத்தியிருந்தார்.இந்நிலையில், மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் இல்லத்தில் சந்தித்துள்ளார். அப்போது, தான் வரைந்த ஓவியத்தை ரஜினிக்கு பரிசளித்த பிரணவ், ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு?- மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:32:44 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:26:47 PM (IST)

தர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 4:48:13 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்: மீண்டும் திமன்றத்தை நாட முடிவு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:31:35 AM (IST)

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விண்ணப்பித்த தமிழக ஏட்டு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:24:57 AM (IST)

தமிழகத்தில் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 4:59:27 PM (IST)
