» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இங்கிலாந்து பெண்ணுக்கு - கடையநல்லூர் மாப்பிள்ளை : கலக்கல் திருமணம்

ஞாயிறு 1, டிசம்பர் 2019 8:51:02 PM (IST)இங்கிலாந்து பெண்ணுக்கும் கடையநல்லூர் மாப்பிள்ளைக்கும் தென்காசியில் திருமணம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம்  கடையநல்லூர்  கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இந்திரா உதிரமணி தம்பதியர் தற்போது மும்பையில் வசித்து வருகின்றனர் இவர்களது மகன் ஸ்டாலின் நாகராஜ் பொறியியல் பட்டதாரியான இவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவரோடு அதே நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்த பார்பராப்ராக்ட்டெஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பெண்ணை விரும்புவதாகவும் அவரையே திருமணம்  செய்வேன் என பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் குடியிருந்தாலும் உற்றார் உறவினர் நண்பர்கள் தமிழ்நாட்டில் சொந்த ஊரில் கடையநல்லூரில் வைத்துக்கொள்ளலாம் என மணப்பெண்ணின் பெற்றோரிடம் பேசினர். அதனை தொடர்ந்து மணப்பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் 30 பேர் கடையநல்லூர்  வந்தனர். திருமணத்திற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் மணமகனின் உறவினர்கள் செய்திருந்தனர். திருமணத்தின் சிறப்பம்சமாக மணமக்கள் தமிழக மக்களின் பாரம்பரிய உடையான பட்டு சேலை பட்டு வேஷ்டி  சட்டை அணிந்திருந்தனர் திருமண மண்டபத்தில் இந்து  மத வழக்கப்படி மணமகன்  தாலி கட்டி மெட்டி அணிவித்தார்.

பின்னர், மணமேடையை மூன்று முறை சுற்றி  வந்து பெற்றோர் மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். இங்கிலாந்து ஆண்கள், பெண்கள்  குற்றால அருவியின் அழகை கண்டு கழித்தும் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம்  கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் அழகைக்கண்டு வியந்து திருமண விருந்தையும் கண்டு மெய்சிலிர்த்தனர். திருமணம் என்றால் இவ்வளவும் நடைபெறுமா என அருகில் இருந்தவர்களிடம் கேட்டு ஆச்சர்யமடைந்தனர்.  மணமக்களை மணமகனின் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.


மக்கள் கருத்து

MuthukumarDec 2, 2019 - 01:05:09 PM | Posted IP 157.5*****

Nammma oorukaran veraa levell

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory