» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சியர் அலுவலக இடத்தில் குழப்பம் செய்யும் திமுக : தென்காசியில் வால்போஸ்டரால் பரபரப்பு

சனி 30, நவம்பர் 2019 1:47:56 PM (IST)தென்காசியில் புதிய மாவட்டம் அமைக்க தமிழக அரசு உரிய அறிவிப்பை வெளியிட்டு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் திமுகவினர் சிலர் குழப்பம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து வால்போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி பகுதி பொதுமக்கள் கூறும் போது, கடந்த ஜூலை 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி 110 விதிகளின்படி தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.அதன்பின் உடனடியாக புதிய மாவட்டத்திற்கு செயல் அலுவலரை நியமனம் செய்ததோடு புதிய மாவட்ட துவக்க விழா கடந்த நவம்பர் 22 இல் தென்காசியில் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர் அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் தென்காசி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான தென்காசி தலைமையிலான புதிய மாவட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று புதிய மாவட்டம் துவங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்ட தேவையான இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர் அதன்படி தென்காசி பகுதியில் சுமார் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.அந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் இராதாகிருஷ்ணன் மற்றும் நெல்லை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்தனர். இதில் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட விதைப்பண்ணை இடம் சுமார் 38 ஏக்கர் தரிசு நிலமாகவும் அதுவும் அரசுக்குச் சொந்தமான இடமாகவும் இருந்ததோடு அதனைச்சுற்றி மேலும் பத்து ஏக்கர் நிலங்கள் அரசுக்கு சொந்தமான இடங்களில் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

எனவே மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு விதைப்பண்ணை அமைந்திருந்த அரசு இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.இதனை அனைத்து தரப்பு மக்களும் ஆதரிக்கும் நிலையில் திமுக நிர்வாகிகள் இருவர் மட்டும் மேலகரம் இடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட கூடாது என்கிறார்கள் மேலும் அவர்கள் தென்காசி நகராட்சி பகுதிக்குள் கட்ட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

நகராட்சி பகுதிக்குள் அரசுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலம் எங்கு உள்ளது என்று கேட்டால் அதற்கு உரிய பதிலை அவர்களால் கூற முடியவில்லை ஆனாலும் தொடர்ந்து மேலகரம் பகுதியில் அரசு தேர்வு செய்துள்ள இடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதனை கண்டித்து தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளோம்.

கோரிக்கை மனுக்களில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்டும் இடப் பிரச்சனையில் குழப்பத்தை உருவாக்கும் திமுகவினர் தென்காசியில் புதிய மாவட்டம் அமைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தனர்.இந்நிலையில் தென்காசி பகுதி மக்கள் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக நிர்வாகிகளை கண்டித்து தென்காசி பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications
Black Forest Cakes

Thoothukudi Business Directory