» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் சேர்ந்த 6 மாதத்தில் அதிரடி தாவல்: பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

சனி 30, நவம்பர் 2019 12:47:37 PM (IST)

சென்னை வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில்  நடிகர் ராதாரவி தனனை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி, ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டார். பின்பு 2000-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். கடந்த 2002-ம் ஆண்டு, சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ராதாரவி வெற்றி பெற்றார். ஆனால், அடுத்ததாக, 2006 சட்டப்பேரவை தேர்தலில் ராதாரவி போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு, அதிமுகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் தான், கடந்த மார்ச் மாதம், நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் ராதாரவிக்கு கண்டனங்கள் குவிய ராதாரவி திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராதாரவியை கண்டிக்கவும் செய்தார். இதையடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராதாரவி,பின்னர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்து 6 மாதமே ஆன நிலையில் இப்போது அந்த கட்சியில் இருந்தும் விலகிய ராதாரவி, இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் தனனை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

உண்மை சொல்பவன்Dec 2, 2019 - 10:55:58 AM | Posted IP 162.1*****

மூடன் காசுக்காக விலை போவான்

HellDec 1, 2019 - 10:17:46 AM | Posted IP 162.1*****

Telugu Dog Joins Bjp for Bones

MakkalDec 28, 1575 - 10:30:00 AM | Posted IP 173.2*****

வாய் பேச்சை கேட்டு யாரும் ஒட்டு போட மாட்டார்கள்.உங்கள் வாய்யும் நாறவாய்தான் mr ஆசீர்

ஆசீர். விNov 30, 2019 - 02:11:51 PM | Posted IP 162.1*****

இவரால் பாஜகவுக்கு ஒரு ஒட்டு உறுதி. ஆனால் இவரது வாய் மீதி இருக்கும் சில ஓட்டுக்களை சிதறடித்து விடுமே???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory