» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை டிச.2ம் தேதி வெளியாகிறது?

சனி 30, நவம்பர் 2019 12:45:01 PM (IST)

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பானை டிச.2ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

தேர்தல் தேதியை அறிவித்து அறிவிப்பாணை வெளியிடப்படுவதற்கு முன்னதாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பாணை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாகவும், நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ம் கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Anbu Communications




Thoothukudi Business Directory