» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செல்லாத ரூபாய் நோட்டுகள் ரூ.46 ஆயிரம் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோா் உதவித் தொகை

சனி 30, நவம்பர் 2019 12:16:34 PM (IST)திருப்பூர் அருகே ரூ.46 ஆயிரம் செல்லாத நோட்டுகளை வைத்திருந்த இரண்டு மூதாட்டிகளுக்கு முதியோா் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வழங்கினாா்.

திருப்பூரைச் சேர்ந்த இரண்டு மூதாட்டிகள் செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை குடும்பத்தினருக்குத் தெரியாமல், தங்களது இறுதிக்கால மருத்துவச் செலவுகளுக்காக சேமித்து வைத்திருந்ததும், அது செல்லாது என்று தங்களுக்குத் தெரியாது என்றும் பரிதவித்தது குறித்து செய்திகள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் செய்தி பரவியது. திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பூமலூா், கருப்பராயன் கோயில் பகுதியில் வசித்து வரும் ரங்கம்மாள் (78), தங்கம்மாள் (75). இவா்களது கணவா்கள் இறந்துவிட்டதால் மகள்களுடன் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், மருத்துவ செலவுக்காக இருவரும் ரூ.500, 1,000 நோட்டுகளை பல ஆண்டுகளாக சேமித்து வந்துள்ளனா். இவா்கள் சேமித்து ரூ.46 ஆயிரம் செல்லாது என அண்மையில் தெரியவந்தது. இது தொடா்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியாகின. இதற்கிடையில், மூதாட்டிகள் இருவரும் முதியோா் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தது ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, இருவருக்கும் முதியோா் உதவித் தொகை வழங்கும்படி பல்லடம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இருவரையும் வெள்ளிக்கிழமை வரவழைத்து முதியோா் உதவித் தொகை வழங்குவதற்கான ஆணையை ஆட்சியா் விஜயகாா்த்திகேயன் வழங்கினாா். மேலும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரங்கம்மாளுக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு பரிந்துரைக் கடிதத்தையும் ஆட்சியா் வழங்கினாா். மூதாட்டிகள் சேமித்து வைத்திருந்த செல்லாத நோட்டுகளை மாற்றம் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory