» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
வெள்ளி 29, நவம்பர் 2019 4:34:36 PM (IST)
தமிழகத்தின் 37-வது மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடங்கி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் நிர்வாக வசதிக்காக மேலும் 5 மாவட்டங்கள் புதிதாக தொடங்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, 33-வது மாவட்டமாக தென்காசியும், 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியும் தொடங்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 2 மாவட்டங்கள் புதிதாக தொடங்கப்பட்டன. 35-வது மாவட்டமாக திருப்பத்தூரும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையும் உதயமாகின.
அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் கடைசியாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயமானது. இதற்கான விழா செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 28-ம் தேதி தைப்பூச தேரோட்டம்
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:22:08 AM (IST)

தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்: நெல்லையில் சீமான் பேட்டி
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:15:03 AM (IST)

தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது : கோவையில் ராகுல் பேச்சு!!
சனி 23, ஜனவரி 2021 4:37:31 PM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

சென்னை வெளிவட்டச் சாலையின் 2ஆம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 23, ஜனவரி 2021 12:22:53 PM (IST)

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்: 12 கிலோ நகை, பணம் மீட்பு
சனி 23, ஜனவரி 2021 11:17:29 AM (IST)
