» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக அரசு மறைமுக திட்டம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வெள்ளி 29, நவம்பர் 2019 3:33:02 PM (IST)

அ.தி.மு.க. அரசுதான் மறைமுகமாக உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திட்டமிட்டு உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- உள்ளாட்சி மன்ற தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி செய்வதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராக உள்ளது. அ.தி.மு.க. அரசு தான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திட்டமிட்டுள்ளது. எனவே தான் உள்ளாட்சி தேர்தலுக்கு முறையான எந்த தயாரிப்புகளையும் செய்யவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வரையறை இதுவரை செய்யப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை. பட்டியல் இனத்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான வார்டுகள் வரையறை செய்யப்படவில்லை. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று முன்பு கூறினார்கள். இப்போது மறைமுக தேர்தல் என்று அவசர சட்டம் பிறப்பித்து இருக்கிறார்கள்.

இப்படி உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த வகையிலும் அரசு சட்டப்படி தயாராகவில்லை. யாராவது கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடர்வார்கள். அதை காரணமாக வைத்து உள்ளாட்சி தேர்தலை நிறுத்திவிடலாம் என்று இந்த அரசு சதிசெய்து வருகிறது. ஆனால் தி.மு.க. மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி செய்கிறது. தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார். அ.தி.மு.க. அரசுதான் மறைமுகமாக இந்த தேர்தலை நிறுத்த திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory